×

மீன்பிடி தடைக்காலம் எதிரொலி ஈரோட்டில் மீன்கள் விலை உயர்வு

 

ஈரோடு, மே 5: தமிழ்நாட்டில் நாகை, காரைக்கால், ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டிற்கு 25 முதல் 30 டன் வரை மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால், தமிழ்நாட்டில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால், மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்துள்ளது. நேற்று கேரளாவில் இருந்து வெறும் 8 டன் மீன்கள் மட்டுமே வரத்தாகி இருந்தது. இதன் காரணமாக, மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது.

ஈரோடு மார்க்கெட்டில் நேற்று விற்கப்பட்ட மீன்களின் விலை கிலோவில் வருமாறு:- (ரூ) சால்மோன் – 900, கொடுவா-800, வெள்ளைவாவல்-1200, கருப்பு வாவல்-900, வஞ்சரம்-1100, மயில் மீன்-800, கிளி மீன்-700, முரல்-450, சங்கரா-400, திருக்கை-400, வசந்தி-550, விளாமின்-550, தேங்காய் பாறை-550, பெரிய இறால்-700, சின்ன இறால்-500, ப்ளூ நண்டு-700, அயிலை-300, மத்தி-250, டூயானா- 700க்கு விற்பனை செய்யப்பட்டது.

The post மீன்பிடி தடைக்காலம் எதிரொலி ஈரோட்டில் மீன்கள் விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode Stony Bridge Fish Market ,Tamil Nadu ,Nagai ,Karaikal ,Rameswaram ,Thoothukudi ,Kerala ,Dinakaran ,
× RELATED வணிக ரீதியிலான இயந்திரம் வாங்க பெண்களுக்கு 50 சதவீதம் மானியம்