×

மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்

 

ஈரோடு, ஜன.6: ஈரோடு ஈவிஎன் சாலையில் உள்ள நகரியம் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (7ம் தேதி) காலை 11 மணியளவில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டமானது ஈரோடு மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது. எனவே, இந்த கூட்டத்தில், ஈரோடு நகர் முழுவதும், கருங்கல்பாளையம், மரப்பாலம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், வீரப்பன் சத்திரம், சம்பத் நகர், திண்டல், அக்ரஹாரம், மேட்டுக்கடை, சித்தோடு, கவுந்தப்பாடி ஆகிய பகுதிகளை சார்ந்த மின் பயனீட்டாளர்கள் பங்கேற்று மின்சாரம் சார்ந்த குறைகளை
தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Erode ,Nagariyam Division Electricity Distribution Executive ,EVN Road, Erode ,Erode Electricity Distribution… ,
× RELATED வணிக ரீதியிலான இயந்திரம் வாங்க பெண்களுக்கு 50 சதவீதம் மானியம்