×

டூவீலர்கள் மோதி முதியவர் பலி

 

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஏ.பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அனுசியா தேவி(36). கோபாலபுரம் சர்க்கரை ஆலையில் தட்டச்சராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் காலை, தனது டூவீலரில் பணிக்கு சென்று கொண்டிருந்தபோது, அம்மாபாளையம் பாலம் அருகே பின்னால் வந்த தோலனூர் பகுதியைச் சேர்ந்த மாதையன்(38), ராஜா(55) ஆகியோர் சென்ற டூவீலர், முன்னால் சென்ற அனுசியா தேவியின் டூவீலர் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், மாதையன், ராஜா ஆகியோருக்கும் பலத்த அடிபட்டதில், அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று மாலை சிகிச்சை பலனளிக்காமல் ராஜா இறந்தார். இதுபற்றி தகவலறிந்த ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலர்கள் மோதி முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Pappireddipatti ,Anusiya Devi ,A. Pallipatti ,Gopalapuram sugar mill ,
× RELATED இலவச மருத்துவ முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்