×

கூடலூரில் பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்

கூடலூர், மே 3: தேனி மாவட்டம் கூடலூர் விதை பண்ணை சாலையில் உள்ள ராசாத்தி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இரண்டு நாட்கள் நடைபெற்றது. முதல் நாளான நேற்று முன் தினம் கரகம் எடுக்கும் நிகழ்ச்சியும், பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வந்தும் அம்மனை வழிபட்டனர்.

இரண்டாம் நாளன்று, ஏராளமான பெண் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்தனர். சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, அம்மனை ஏராளமாக பக்தர்கள் வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை ரசாத்தியமன் கோயில் கமிட்டி தலைவர் ராசா, செயலாளர் சசிகுமார், பொருளாளர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

The post கூடலூரில் பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : Women's Mulapari procession in Gudalur ,Gudalur ,Chithirai festival ,Rasathi Amman ,Seed Farm Road ,Theni district ,Karagam ceremony ,
× RELATED நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மாயம்