மேட்டுப்பாளையம், மே 3: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில், சிறுமி தற்போது ஏழு மாத கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த அப்பகுதி பொதுமக்கள் சைல்டு ஹெல்ப்லைனுக்கு தகவல் அளித்துள்ளனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஊரக நல அலுவலர் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தகவல் உறுதிப்படுத்தப்பட்டது. புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post சிறுமி கர்ப்பம்; வாலிபர் மீது போக்சோ வழக்கு appeared first on Dinakaran.
