- ஈரோடு
- டாடா நகர், ஆந்திரப் பிரதேசம்
- எர்ணாகுளம், கேரளா
- நடைமேடை
- ஈரோடு ரயில் நிலையம்
- ஈரோடு ரயில்வே போலீஸ்
- தின மலர்
ஈரோடு, மே 3: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் நேற்று முன்தினம் இரவு ஆந்திரா மாநிலம் டாடா நகர்-கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் பிளாட்பார்ம் 2ல் வந்து நின்றது. இதையடுத்து ஈரோடு ரயில்வே போலீசார், அந்த ரயிலில் ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தனர். அப்போது, ரயிலின் பொது பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பேக்கை கைப்பற்றி சோதனை நடத்தினர்.
இதில், அந்த பேக்கில் 28 கிலோ எடையிலான குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பேக்கை யாரும் உரிமை கோரவில்லை. இதையடுத்து ரயில்வே போலீசார், கைப்பற்றப்பட்ட 28 கிலோ குட்கா மற்றும் புகையிலையை ஈரோடு தெற்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து, குட்கா கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ரயிலில் கடத்தி வரப்பட்ட 28 கிலோ குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.
