- திண்டுக்கல்
- சிதம்பரசாமி
- தாராபுரம், திருப்பூர் மாவட்டம்
- மாவட்ட அறிவுசார் சொத்து அமலாக்கப் பிரிவு
- திண்டுக்கல் மாவட்டம்
- தின மலர்
திண்டுக்கல், மே 3:திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்தவர் சிதம்பரசாமி (60). இவர் தனது நிறுவனத்தின் பெயரில் திண்டுக்கல் மாவட்ட கடைகளில் அனுமதியின்றி அரிசி விற்பனை செய்வதாக மாவட்ட அறிவு சார் சொத்துரிமை அமலாக்க பிரிவு போலீசாரிடம் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெப்லா தலைமையில் சிறப்பு எஸ்ஐக்கள் நிர்மலாமேரி, வைரசுந்தரம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
இதில் வடமதுரை அருகே தென்னம்பட்டி பகுதியில் உள்ள ஒரு அரிசி கடையில் 26 கிலோ எடை கொண்ட 545 மூட்டைகள், முள்ளிப்பாடி ஆரோக்கியசாமி நகரில் உள்ள ஒரு அரிசி கடையில் 26 கிலோ எடை கொண்ட 72 மூட்டைகள் என சிதம்பரசாமி நிறுவனத்தின் பெயரில் அரிசி மூட்டைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இரண்டு கடைகளிலும் இருந்த 617 மூட்டையில் இருந்த 16 டன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.7,74,000 என்று போலீசார் கூறினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வேறொரு நிறுவனத்தின் பெயரில் விற்பனை 16 டன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.
