சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளில் 5, 8ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண் பெற்றால் பெயில் செய்யும் நடைமுறைக்கு கல்வியாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 5, 8ம் வகுப்பு ஆண்டுத் தேர்வில் 30 சதவீதத்துக்கும் குறைவான மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி வழங்கப்படாது எனவும், இந்த நடைமுறை வரும் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், தமிழகத்தில் உள்ள சில சிபிஎஸ்இ பள்ளிகள் பெற்றோர்களிடம் இந்த விவரத்தை தெரிவித்து ஒப்புதல் கடிதத்தில் கையொப்பம் பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. இதை கண்டித்து பல்வேறு தரப்பினரும் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்களை சிபிஎஸ்இ வாரியம் படிப்படியாக அமல் செய்து வருகிறது. எனினும், 5, 8ம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சி முறை ரத்து தொடர்பாக சிபிஎஸ்இ சார்பில் அதிகாரப்பூர்வமாக எவ்வித அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இதனால் பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் நிலவிவருகிறது. சிபிஎஸ்இ தரப்பில் உரிய விளக்கம் வெளியிடப்பட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
The post சிபிஎஸ்இ பள்ளிகளில் பெயில் செய்யும் நடைமுறைக்கு வலுக்கும் கண்டனங்கள்: பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு appeared first on Dinakaran.
