சென்னை: ‘அனலி’ படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய சிந்தியா லூர்டே நடிகரும், தவெக தலைவருமான விஜய் மீண்டும் சினிமாவில் நடிப்பார் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசுகையில், ‘‘2026 தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நவம்பரில் விஜய் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவார். நான் தயாரிக்கும் படத்தில் அவர் நடிப்பார். விஜய்யுடன் இணைந்து நான் நடிப்பேன். நான் சிறுவயதில் இருந்து ஜாதகம் பார்ப்பேன். அதை வைத்து தான் இதை சொல்கிறேன். அவர் சினிமாவை விட்டு போய் விட்டார் என்று சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன், நிச்சயம் 2 வருடத்திற்குள் அவர் சினிமாவில் மீண்டும் நடிக்க வருவார். அதை நீங்கள் பார்ப்பீர்கள்” என்றார்.
