×

வரைவு வாக்காளர் பட்டியலில் பெருங்குழப்பம் ஓபிஎஸ்சின் போடி தொகுதியில் ஒரே முகவரியில் 93 வாக்காளர்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி

போடி: ஓபிஎஸ்சின் போடி சட்டமன்ற தொகுதி வரைவு வாக்காளர் பட்டியலில் ஒரே கதவு எண்ணில் 93 வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிக்கு பின் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், தேனி மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்நிலையில், போடி ஊராட்சி ஒன்றியம், அணைக்கரைப்பட்டி கிராம ஊராட்சி முந்தல் கிராமத்தில், உள்ள ஆதிதிராவிடர் காலனி மற்றும் கொட்டகுடி ஊராட்சியில் உள்ள முட்டம் உள்ளிட்ட 5 மலைக் கிராமங்களில் ஒரே கதவு எண்ணில் 93 வாக்காளர்கள் இருப்பதாக வெளியான தகவல் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து அதிகாரிகள் வரைவு வாக்காளர் பட்டியலை சரிபார்த்தனர். அப்போது வார்டு எண் என்பது வாக்காளர்களின் கதவு எண் என மாறியதால் இந்தக் குழப்பம் ஏற்பட்டதாகவும், இதனை சரிசெய்யும் பணியில் எஸ்ஐஆர் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : OPS ,Bodi ,SIR ,Tamil Nadu ,Theni ,
× RELATED தட்டச்சு, சுருக்கெழுத்து சான்றிதழ் தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்