×

என்சிஎச்எம் ஜேஇஇ நுழைவுத்தேர்வு; விண்ணப்ப பதிவு தொடக்கம்

சென்னை: தேசிய உணவக மேலாண்மை மற்றும் உணவு தொழில்நுட்பக் குழுமத்தின் கீழ் (என்சிஎச்எம்சிடி) இயங்கும் 78 கல்வி மையங்களில் பிஎஸ்சி விருந்தோம்பல் மற்றும் உணவக நிர்வாகம் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இதில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (என்சிஎச்எம் ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி 2026-27ம் கல்வியாண்டுக்கான என்சிஎச்எம் ஜேஇஇ நுழைவுத்தேர்வு கணினி வழியில் ஏப்ரல் 25ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விருப்பமுள்ள மாணவர்கள் /exams.nta.ac.in/NCHM/ எனும் இணையதளம் வழியாக ஜனவரி 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள பின்னர் கால அவகாசம் வழங்கப்படும். இது சார்ந்த கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 011-40759000/69227700 என்ற தொலைபேசி மூலமாக அல்லது nchm@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என என்டிஏ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,BSc Hospitality ,Administration ,National Restaurant Management and Food Technology Group ,NCHMCD ,
× RELATED திருப்படி திருவிழாவை ஒட்டி திருத்தணி...