×

சவுந்தர்யா இயக்கத்தில் நடிக்கும் சத்யராஜ்

சென்னை: தனுஷ், சிவகார்த்திகேயன், ஸ்ருதிஹாசன் நடித்த ‘3’ என்ற படத்தின் மூலம் இயக்குனரானவர், ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா. பிறகு கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் நடித்த ‘வை ராஜா வை’ என்ற படத்தை இயக்கினார். தற்போது ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கவுரவ வேடத்திலும் மற்றும் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஹீரோக்களாகவும் நடிக்கும் ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடித்த ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் கேப்சரிங் படத்தின் மூலம் இயக்குனரான ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா, அடுத்து தனுஷ், பாலிவுட் நடிகை கஜோல் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ என்ற படத்தை இயக்கினார். தற்போது வெப்தொடர் ஒன்றை இயக்குகிறார். ஓடிடி தளத்தில் வெளியிட உருவாக்கப்படும் இதில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார். இந்த வெப்தொடருக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. அதேபோல் டெக்னீஷியன்களை தேர்வு செய்யும் பணியிலும் சவுந்தர்யா மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

The post சவுந்தர்யா இயக்கத்தில் நடிக்கும் சத்யராஜ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : satyaraj ,Chennai ,Dhanush ,Sivakarthykeyan ,Srudihasan ,Rajinikanth ,Aiswarya ,Gautam Karthik ,Priya Anand ,Rajinikanth Moydeen Bai ,Sathyaraj ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கல்லூரி பேராசிரியர் வீட்டில் நகை திருட்டு