×

சென்னையில் காற்று மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை விதிகளை மீறி கட்டிட கழிவுகளை கையாள்பவர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை அபராதம்: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று ரிப்பன் மாளிகையில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் ஆணையாளர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மொத்த்ம் 237 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முக்கிய தீர்மானங்கள் வருமாறு: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டுமானம் மற்றும் இடிபாட்டு கழிவுகளை திறமையாக கையாளுபவர்களுக்காக சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானங்கள் மேற்கொள்வதற்காக வரைவு வழிகாட்டுதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வழிக்காட்டுதலை டெல்லி மும்பை போன்ற பெருநகரங்கள் பின்பற்றி வருகின்றன.

குறிப்பாக மும்பையில் இந்த வழிக்காட்டுதலை மீறுபவர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழிகாட்டுதல்களை சென்னையிலும் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் நடைபெறும் அனைத்து கட்டிட கட்டுமானங்கள் ரெடிமீட்ஸ் கான்கிரீட் ஆலைகள் மற்றும் பிற கட்டுமான பணிகளால் ஏற்படும் சுற்றுசூழல் மாசு ஏற்படுவதை தடுக்க முடியும். மேலும், கட்டுமான பணிகளால் ஏற்படகூடிய காற்று மாசுபாட்டை இந்த வழிக்காட்டுதழ் மூலம் தடுக்க முடியும். எனவே தான் காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு கட்டிட வழிகாட்டு நெறிமுறைகள் பரிந்துரைக்கப்படுகிறது.

இதே போன்று, மழை காலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விருகம்பாக்கம், ஓட்டேரி போன்ற பகுதிகளில் மழை நீரானது வீடுகளுக்குள் புகும் நிலை ஏற்படுகிறது. அதனால் நல்லா கால்வாய், விருகம்பாக்கம் நீர் வழி கால்வாய் ஆகியவற்றை புனரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்து வந்தது. அதனடிப்படையில், இந்த கால்வாயை சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் எடுத்து பராமரிக்க தமிழக அரசு ஆணையிட்டது. அதன்படி நீர்வள ஆதார துறையினர் இந்த 2 கால்வாய்களை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைத்தனர். இந்த 2 கால்வாய்களிலும் மழை நீர் சீராக செல்ல ஒரு நீர்நிலை வல்லுநரை நியமித்து, புணரமைக்க முடிவு செய்யப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதற்காக ரூ. 95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தி.நகரில் அமைக்கப்பட்டு வரும் புதிய பாலத்திற்கு ஜெ.அன்பழகன் பெயர் சூட்ட மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறப்பட்டது.

The post சென்னையில் காற்று மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை விதிகளை மீறி கட்டிட கழிவுகளை கையாள்பவர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை அபராதம்: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Corporation Council ,Ripon Building ,Mayor ,Priya ,Chennai Corporation ,Deputy ,Mahesh Kumar ,Commissioner ,Kumaragurubaran ,Dinakaran ,
× RELATED நெல்லை வண்ணார்பேட்டையில் புதிதாக அமைத்த சாலை 2 மாதங்களிலேயே சேதம்