×

குன்னூரில் கேரட் லாரி- கார் மோதி விபத்து

குன்னூர் : குன்னூர் மலைப்பாதையில் கடும் மேகமூட்டத்தால் லாரி, கார் மோதி விபத்து ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் நேற்று காலை கடும் மேகமூட்டம் நிலவியது. இதனால் சாலைகளில் வாகனங்கள் மஞ்சள் விளக்குடன் ஊர்ந்து சென்றனர். சுற்றுலா பயணிகள் மேகத்துடன் செல்பி எடுத்தனர்.

இந்நிலையில் காட்டோரி மேலூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு கேரட் லாரி புறப்பட்டது. குன்னூர் மலைப்பாதையில் வந்தபோது எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. குன்னூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : Coonoor ,Nilgiris district ,
× RELATED கடும் பனிப்பொழிவால் தஞ்சை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை வரத்து குறைவு