×

கரப்ஷன் ஆட்சியை நடத்தியவர் அடுத்த வெர்ஷன் பற்றியெல்லாம் எடப்பாடி பழனிசாமி பேசலாமா? திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கு

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று வெளியிட்ட அறிக்கை: சட்டம் ஒழுங்கு குறித்து சட்டமன்றத்தில் ’பச்சைப் பொய்’ பழனிசாமி சொன்ன பொய் குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு முதல்வர் புள்ளி விவரங்களுடன் தோலுரித்தார். அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி. என அடிமை அதிமுகவின் அவல ஆட்சியைப் பற்றி முதல்வர் சொன்ன உண்மைகளுக்கு பதில் சொல்ல திராணி இல்லாமல் பழனிசாமி வழக்கம் போலவே திமுகவை வசைபாட கிளம்பியிருக்கிறார்.

கரப்ஷன் ஆட்சியை நடத்திய பழனிசாமி, அடுத்த வெர்ஷன் பற்றியெல்லாம் பேசலாமா? பாஜ கூட்டணியில் சேர்ந்த போதே அதிமுகவின் வெர்ஷன் முடிந்துவிட்டது. கூட்டணி ஆட்சி என்று சொன்ன போதே பழனிசாமியின் அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டது. அவரது குடும்பமே முடிவுரை எழுதிவிட்டது. பாஜ கூட்டணிக்கு பழனிசாமி பம்மியதற்கு மகன் மிதுனே சாட்சி. அடிமை ஆட்சிக்கு அதிமுகவே சாட்சி. அதற்கு மக்கள் தொடர்ச்சியாக அதிமுகவுக்கு பரிசளித்த பத்து தோல்விகளே சாட்சி.

தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் பாஜவின் காலடியில் வீழ்ந்துக் கிடந்து அடிமை அரசியல் செய்து வரும் பழனிசாமியை 2026 தேர்தலில் மக்கள் தோற்கடித்து ஓட வைக்கப்போவது உறுதி. திராவிட மாடல் 2.0, அமையப் போகும் வயிற்றெரிச்சலில் பழனிசாமி செய்யும் இந்த கோமாளிக் கூத்துகளைப் பார்த்தால், பரிதாபம்தான் வருகிறது. ‘அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நின்றது’ என சொல்லியிருக்கிறார் பழனிசாமி.

சிறப்பான ஆட்சி நடத்தி இருந்தால், தொடர்ந்து 10 தேர்தல்களில் ஏன் அதிமுக தோற்றது? தமிழ்நாட்டு வரலாற்றில் பழனிசாமியின் நான்கரை ஆண்டு காலம் இருண்டகாலமாகதான் இருந்தது. அரசியலின் கரும்புள்ளி நீங்கள். இனி எந்த காலத்திலும் தமிழ்நாட்டில் ஆட்சியை மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களின் மனங்களையும் பிடிக்கவே முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கரப்ஷன் ஆட்சியை நடத்தியவர் அடுத்த வெர்ஷன் பற்றியெல்லாம் எடப்பாடி பழனிசாமி பேசலாமா? திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கு appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,DMK Organization ,R.S. Bharathi ,Chennai ,Tamil ,Nadu ,Chief Minister ,Palaniswami ,AIADMK ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட...