- பொங்கல் திருவிழா
- உளுந்தூர்பேட்டை
- விக்கிரவாண்டி
- செங்குறிச்சி
- கல்லாக்கிரிச்சி மாவட்டம்
- பொங்கல் பண்டிகை…
உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி சுங்கச்சாவடி வழியாக ஆயிரக்கணக்கான கார், லாரி, பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. பண்டிகை காலங்கள் மற்றும் வாரஇறுதி நாட்களில் இங்கு வாகன நெரிசல் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி கொண்டாடப் படும் நிலையில் சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்றதால் நேற்று மதியத்திற்கு மேல் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால் கூடுதலாக கவுன்டர்கள் திறக்கப்பட்டு வாகனங்களை அனுப்பி வைத்தனர். இருப்பினும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று செல்லும் நிலை ஏற்பட்டது. தடையின்றி வாகனங்கள் செல்வதற்கான போதிய ஏற்பாடுகளை டோல்கேட் நிர்வாகத்தின் சார்பில் செய்ய வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இரவில் நிலைமை சீரான நிலையில் நாளை முதல் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விக்கிரவாண்டி: இதேபோல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள சுங்கச்சாவடியிலும் நேற்று மாலை அதிகளவு வாகனங்கள் கடந்து சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
