- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மன்னார் வளைகுடா
- அரேபிய கடல்
- சென்னை
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- வட கிழக்கு
- தமிழ்நாடு…
சென்னை: மன்னார் வளைகுடா மற்றும் அரபிக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள இரண்டு காற்று சுழற்சிகள் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ள வட கிழக்கு பருவமழை காரணமாக கடலோரப் பகுதியில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், தலைஞாயிறு, நீலகிரி மாவட்டங்களிலும் 30மிமீ மழை பெய்துள்ளது. இது தவிர தமிழ்நாடு முழுவதும் தூறல் மழை நீடித்து வருகிறது.
இந்நிலையில் நெடுந்தீவு பகுதியில் இருந்து கரை கடந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையில் பாதியும், மன்னார் வளைகுடாவில் பாதியும் தாழ்வுப்பகுதியாக நிலை கொண்டுள்ளது. தற்போது காற்று சுழற்சியாக மாறி, கடலில் இணையாமல் தனித்து இருப்பதால், மழை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வட கிழக்கு திசையில் இருந்து குளிர் காற்று வீசி வருகிறது. குறிப்பாக 17 டிகிரியாக குறைந்து சென்னைப் பகுதியில் கடுமையான குளிர் காற்று வீசிவருகிறது.
வெயில் வந்தால் தான் இந்த நிலை மாறி மழை பெய்யும். அரபிக் கடலில் ஒரு காற்று சுழற்சியும் நீடித்துக் கொண்டு இருப்பதால், இன்றும் நாளையும் மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் உள் மாவட்டங்களிலும் மழை பெய்யும். மன்னார் வளைகுடாப் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தம் மேற்கு நோக்கி நகரும் பட்சத்தில் மேலும் மழை தீவிரம் அடையும். பரங்கிப்பேட்டை, புவனகிரி, சுற்றுப் பகுதியில் இன்று மழை பெய்யும். கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி மழை மேகம் வந்துகொண்டு இருக்கிறது. இந்த மழை நாளை மாலை வரை மழை பெய்யும். 14ம் தேதி மழை குறையும். வயநாடு, வால்பாறை பகுதிகளில் 14ம் தேதி லேசான மழை பெய்யும். இன்றும் நாளையும் சென்னையில் மழை குறைவாக பெய்யும்.
திருவண்ணாமலைக்கு தெற்குப் பகுதியான கள்ளக்குறிச்சி கடலூர், மயிலாடுதுறை பெரம்பலூர் அரியலூர், திருச்சி, தர்மபுரி, நாமக்கல் சேலம் நீலகிரி கரூர், திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம், ஈரோடு, மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் இன்றும் நாளையும் மழை பெய்யும். இதையடுத்து, 24, 25ம் தேதிகளில் இலங்கைக்கு தென் கிழக்கு பகுதியில் மழை பெய்யும். அதன் தொடர்ச்சியாக நாகப்பட்டினம், தஞ்சாவூர் புதுக்கோட்டை, அறந்தாங்கி, தொண்டி, ராமநாதபுரம், கடலோரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்்களில் மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. குறிப்பாக கடலோரப் பகுதிகளில் குடியரசு தினம் வரையில் மழை பெய்யும்.
