×

சூலூர் அருகே செஞ்சேரி மலை முருகன் கோயிலுக்கு சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: தாய், மகள் படுகாயம்

கோவை: சூலூர் அருகே செஞ்சேரி மலை முருகன் கோயிலுக்கு சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து குள்ளானதில் தாய், மகள் படுகாயம் அடைந்துள்ளனர். சூலூரைச் சேர்ந்த ஸ்ரீநிவேதா, தனது தாயார் வாணியுடன் கார் ஒன்றில் செஞ்சேரி மலை கோயிலுக்கு சென்றிருக்கிறார். பார்க்கிங்கில் காரை நிறுத்த முயன்றபோது, பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால் 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post சூலூர் அருகே செஞ்சேரி மலை முருகன் கோயிலுக்கு சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: தாய், மகள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Sencheri Malai Murugan Temple ,Sulur ,Coimbatore ,Sreenivetha ,Sencheri Malai Temple ,Vani ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி...