×

பூந்தமல்லி சிவன், பெருமாள் கோயில்களில் உழவாரப்பணி


பூந்தமல்லி: இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றம் சார்பில் பூந்தமல்லி தையல் நாயகி உடனுறை வைத்தீஸ்வரன் கோயில், திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில்களில் சுத்தம் செய்யும் உழவாரப்பணி நேற்று நடைபெற்றது.‌ முன்னதாக திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க திருமுறை ஈசனை சுமந்து திருமுறைகள் பாடி விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி அடியார்கள் புடை சூழ பூந்தமல்லியின் முக்கிய சாலைகளில் பொதுமக்களை சந்தித்து விழிப்புணர்வு திருவீதி உலா நடைபெற்றது. உழவாரப்பணி மற்றும் திருவீதியுலா நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள் மற்றும் அடியார்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி மரக்கன்றுகள் நடும் பணியும், பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தும் வகையில் பொதுமக்களுக்கு துணிப்பை வழங்கினர். இதையடுத்து வைத்தீஸ்வரன் கோயில் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில்கள் மற்றும் 3 கோயில் குளங்கள் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு செடி, கொடிகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து அடியார்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

The post பூந்தமல்லி சிவன், பெருமாள் கோயில்களில் உழவாரப்பணி appeared first on Dinakaran.

Tags : Poonamalli Shiva and Perumal temples ,Poonamalli ,Hindu Temple Cleaning Service ,Poonamalli Thayyal Nayaki Udanurai Vaitheeswaran Temple ,Thirukkachchi Nambigal ,Varadaraja ,Perumal ,
× RELATED காஞ்சி காமாட்சியம்மன் கோயில்...