டெல்லி: சென்னை பல்கலைக்கழக மசோதாவை 3 ஆண்டுகள் நிலுவையில் வைத்திருந்த நிலையில் குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பினார். சென்னை பல்கலை. துணைவேந்தரை நியமிக்கவும், நீக்கவும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மசோதா நிறைவேற்றம். கடந்த 2022 ஏப்ரல் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு மசோதாவை அனுப்பிய நிலையில், அவரும் திருப்பி அனுப்பினார்.
