- தலையாமழி மாரியம்மன் கோவில் சித்திரை தீமிதி திருவிழா
- கீழ்வேலூர்
- சித்திராய்
- மாரியம்மன் கோவில்
- தலையாமழி
- நாகப்பட்டினம் மாவட்டம்
கீழ்வேளூர், ஏப். 29: நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் தலையாமழை கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆண்டு சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 25ம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் இரவு வீதி உலா காட்சி நடைபெற்று வந்தது. நேற்று முந்தினம் இரவு ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். அம்மனுக்கு சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் சாத்தப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தீமிதித்தும் மாவிளக்கு போட்டும் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் கிராமவாசிகள் உபயோதாரர்கள் செய்தனர்.
The post தலையாமழை மாரியம்மன் கோயில் சித்திரை தீமிதி திருவிழா appeared first on Dinakaran.
