×

310 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

நாமக்கல், ஏப்.29: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 310 பஞ்சாயத்துக்களிலும், தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1ம்தேதி, கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வரும் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்திலுள்ள 310 கிராம ஊராட்சிகளில், காலை 11 மணிக்கு கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

அதில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், ஆன்லைன் மூலம் மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், சுய சான்றினை அடிப்படையாகக் கொண்டு கட்டிட அனுமதி பெறுதல், வரி மற்றும் வரியில்லாத வருவாய் இனங்களை ஆன்லைன் மூலம் செலுத்துவதை உறுதிபடுத்துதல் மற்றும் பல்வேறு பொருட்கள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். கூட்டத்தில், ஊராட்சி பகுதியை பொதுமக்கள் கலந்து கொள்ளவேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post 310 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Gram Sabha ,Namakkal ,Namakkal district ,Labor Day ,Collector ,Uma ,Dinakaran ,
× RELATED வேன் கவிழ்ந்து விவசாயி பலி