×

நடிகர் அஜித் குமார் உள்ளிட்ட 71 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டது: ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவித்தார்

புதுடெல்லி: நடிகர் அஜித் குமார், கிரிக்கெட் வீரர் அஷ்வின், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா உள்ளிட்ட 71 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வழங்கினார். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு பத்ம விருதுகளை வழங்கி ஒன்றிய அரசு கவுரவித்து வருகிறது. 2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி 25ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் 7 பேருக்கு பத்ம விபூஷண், 19 பேருக்கு பத்ம பூஷண், 113 பேருக்கு பத்ம  என 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், டெல்லி ராஷ்டிரபதி பவனில் முதற்கட்டமாக 71 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில், கலைத்துறையில் சிறந்த பங்களிப்பிற்காக தமிழ்நாட்டை சேர்ந்த நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருதினை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.

இதே போல தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திர அஷ்வின், சிற்பக் கலைஞர் ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், தொழிலதிபர் ஆர்.ஜி.சந்திரமோகன், பிரபல சமையல்கலைநிபுணர் தாமு, பத்திரிகையாளர் லட்சுமிபதி உள்ளிட்டோருக்கு பத்ம  விருது வழங்கப்பட்டது.
சுசுகி மோட்டார்ஸ் முன்னாள் தலைவர் மறைந்த ஒசாமு சுசுகி, மலையாள எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான மறைந்த வாசுதேவன் நாயர், வயலின் கலைஞர் லட்சுமிநாராயணா சுப்ரமணியம் உள்ளிட்ட 4 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, பீகார் முன்னாள் துணை முதல்வர் மறைந்த சுஷில் குமார் மோடி, ஹாக்கி வீரர் ஜேஷ் உள்ளிட்ட 10 பேருக்கு பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது.

பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, தொழிலதிபர் பவன் குமார் கோயங்கா உள்ளிட்ட 57 பேருக்கு பத்ம  விருது வழங்கப்பட்டது. விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மீதமுள்ளவர்களுக்கு வேறொரு நாளில் பத்ம விருதுகள் வழங்கப்படும்.

 

The post நடிகர் அஜித் குமார் உள்ளிட்ட 71 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டது: ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவித்தார் appeared first on Dinakaran.

Tags : Ajith Kumar ,President ,Draupadi Murmu ,New Delhi ,President Draupadi Murmu ,Ashwin ,Balakrishna ,Union government ,
× RELATED குடியரசு தின அணிவகுப்பு விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி