சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம். புதுப்பட்டியில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ரசாயன கலவையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டு 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், ஏழு பேர் படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், பட்டாசு தொழிற்சாலைகள் காலமுறைதோறும் ஆய்வு, அபாயகரமான பொருட்களை பாதுகாப்பாக சேமித்தல், பட்டாசு தயாரிப்பின்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு செயல்முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தல் உள்ளிட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுத்தால் தான் பட்டாசு ஆலையில் அடிக்கடி ஏற்படும் வெடிவிபத்துகளை குறைக்க முடியும். எனவே, கொள்கை விளக்க குறிப்பில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறேன்.
The post பட்டாசு விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.
