×

கும்பகோணம் கலைஞர் பல்கலைக்கழகத்தின் வேந்தர் முதலமைச்சர் : பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் தகவல்!!

சென்னை : கும்பகோணத்தில் புதிதாக அமைய உள்ள கலைஞர் பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தாக்கல் செய்த மசோதாவில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அரியலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயன் பெறும் வகையில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்றும் கலைஞர் பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் 36 கலை அறிவியல் கல்லூரிகள் வரும் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கும்பகோணம் கலைஞர் பல்கலைக்கழகத்தின் வேந்தர் முதலமைச்சர் : பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் தகவல்!! appeared first on Dinakaran.

Tags : Kumbakonam Kalaignar University ,Chennai ,Higher Education Minister ,Govi Cheliyan ,Chief Minister ,Kalaignar University ,Kumbakonam ,Ariyalur ,Nagai ,Thanjavur ,Thiruvarur ,Chancellor ,Dinakaran ,
× RELATED ரயிலில் கேட்பாரற்று கிடந்த பைகளில் 44 கிலோ கஞ்சா