×

மாநில ஹாக்கி போட்டி: கோவில்பட்டியில்சப் ஜூனியர் பெண்கள்,சீனியர் ஆண்கள் அணி தேர்வு

கோவில்பட்டி, ஏப். 28: மாவட்ட ஹாக்கி அணி தேர்வு குறித்து ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவர் மோகன்ராஜ் அருமைநாயகம், செயலாளர் குருசித்ர சண்முக பாரதி ஆகியோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சப்ஜூனியர் பெண்கள் மாநில சாம்பியன் போட்டி புதுக்கோட்டையில் மே 5 முதல் 8ம்தேதி வரை மற்றும் மாநில சீனியர் ஆண்கள் சாம்பியன் போட்டி கோவில்பட்டியில் மே 10 முதல் 14ம்தேதி வரை ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பாக போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி அணிகள் கலந்து கொண்டு விளையாட இருப்பதால் மாவட்ட சப் ஜூனியர் பெண்கள் அணி அணி தேர்வு வருகிற 29ம்தேதி காலை 7 மணி அளவில் கோவில்பட்டி வஉசி அரசு மேல்நிலைப்பள்ளி ஹாக்கி மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது.தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் வீராங்கனைகள் 01.01.2009க்கு பின் பிறந்தவராக இருக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவராகவும் அல்லது தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளியில் பயின்று வருபவராகவும் இருக்க வேண்டும். தகுதியான வீராங்கனைகள் பிறப்புச் சான்றிதழ், ஆதார், நகல் கொண்டு வரவும்.

இதேபோல் மாவட்ட சீனியர் ஆண்கள் அணி தேர்வு வருகிற 30ம்தேதி அன்று காலை கோவில்பட்டி எஸ்டிஏடி செயற்கைப்புல் ஹாக்கி மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. சீனியர் ஆண்கள் அணி தேர்வில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு வயது வரம்பு கிடையாது. தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி அல்லது தூத்துக்குடி மாவட்டத்தில் பணி செய்பவராகவோ இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9443190781 தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மாநில ஹாக்கி போட்டி: கோவில்பட்டியில்சப் ஜூனியர் பெண்கள்,சீனியர் ஆண்கள் அணி தேர்வு appeared first on Dinakaran.

Tags : State Hockey Tournament ,Kovilbattiilsap Junior Women's ,Men ,Kovilpatty ,Unit ,Thoothukudi ,Mohanraj Arumainayam ,Kuruchitra Shanmuka Bharathi ,Subjunior Women's State Champion Tournament ,Pudukkotta ,Kovilbattiilsap Junior Women, Senior Men's Team Selection ,Dinakaran ,
× RELATED இலவச மருத்துவ முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்