×

கிழுமத்தூர் மாரியம்மன் கோயிலில் 24ம் ஆண்டு பால்குட திருவிழா

குன்னம், ஏப். 28: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கிழுமத்தூர் மாரியம்மன் திருக்கோயிலில் 24ம் ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது. கடந்த 19ம் தேதி சந்தன காப்பு அலங்காரத்துடன் தொடங்கிய திருவிழா தினமும் பூ அலங்காரம், மஞ்சள் அலங்காரம், விபூதி அலங்காரம், சந்தன காப்பு அலங்காரம், நகைகள் அலங்காரம், கோவம் அலங்காரம் உட்பட பல்வேறு அலங்காரங்கள் மாரியம்மன் செய்யப்பட்டு தினமும் விசேஷ தீபாரதனைகள் நடைபெற்றன.

பின்னர் நேற்று காலை பக்தர்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். காலை 11 மணியளவில் மாரியம்மன் க்கு பால்குட அபிஷேகம் நடைபெற்றது. கூடியிருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளை கந்தசாமி ஒருங்கிணைப்பு செய்திருந்தார். அறங்காவலர் குழு தலைவர் கிழுமத்தூர் பொன்னுசாமி பால் குட பூஜை ஏற்பாடுகளை செய்தார்.

The post கிழுமத்தூர் மாரியம்மன் கோயிலில் 24ம் ஆண்டு பால்குட திருவிழா appeared first on Dinakaran.

Tags : 24th annual Palkudam festival ,Kizhumathur Mariamman Temple ,Kunnam ,Perambalur ,annual ,Palkudam festival ,
× RELATED புழல் சிறைச்சாலையில் வாகனங்கள் ஏலம்