×

பஞ்சமி நில மீட்புக் கருத்தரங்கம்

பெரம்பலூர், ஏப்.28: பெரம்பலூர் திருவள்ளுவர் தவச்சாலையில் உள்ள பாவாணர் நூலகத்தில், பஞ்சமி நில மீட்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கிற்கு தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் காப்பியன் தலைமை வகித்தார். மாநில கட்டுப் பாட்டுக்குழு உறுப்பினர் ஞானசேகரன், பாளை செல்வம், துரைராஜ், கல்யாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் இராமர் கலந்துகொண்டு, பஞ்சமி நில மீட்பு-ஒரு பார்வை எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாடு ஒடுக்கப் பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சங்கர் அறிக்கை வாசித்தார். பெரும்புலியூர் இராகு நன்றி கூறினார்.

The post பஞ்சமி நில மீட்புக் கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : Panchami Land Recovery Seminar ,Perambalur ,Pavanar Library ,Thiruvalluvar Monastery, Perambalur ,Tamil Nadu Oppressed Rights Movement ,Kappian ,State Control Committee ,Gnanasekaran ,Palai Selvam ,Dinakaran ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா