×

47வது லீக் போட்டியில் இன்று: எட்டாத உயரத்தில் குஜராத்; தோல்வி துயரத்தில் ராஜஸ்தான்

  • ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெறும் 47வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதுகின்றன.
  •  இந்த 2 அணிகளும் இதுவரை 7 போட்டிகளில் நேருக்கு நேர் களம் கண்டுள்ளன.
  • அவற்றில் குஜராத் 6 போட்டிகளிலும், ராஜஸ்தான் ஒரே ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.
  •  இந்த போட்டிகளில் அதிகபட்சமாக முன்னாள் சாம்பியன்களான குஜராத் 217, ராஜஸ்தான் 196 ரன் வெளுத்துள்ளன.
  •  குறைந்தபட்சமாக குஜராத் 177 ரன் விளாச, ராஜஸ்தான் 118 ரன்னில் ஆட்டமிழந்துள்ளது.
  •  இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 3 போட்டிகளிலும் குஜராத் வெற்றி வாகை சூடியுள்ளது.
  •  நடப்புத் தொடரில் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் 9 லீக் போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. அதனால் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக் குறியாகி உள்ளது.
  • சுப்மன் கில் தலைமையிலான குஜராத் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 6ல் பெற்றி வாகை சூடி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது.
  • இரு அணிகளும் கடைசியாக விளையாடிய தலா 5 போட்டிகளில் ராஜஸ்தான் 5லும் தோல்வியை மட்டுமே பெற்று பரிதாபமான நிலையில் உள்ளது. ஆனால் குஜராத் 4-1 என்ற கணக்கில் வெற்றி தோல்விகளை சந்தித்துள்ளது.
  •  இந்த தொடரில் ஏப்.9ம் தேதி இவ்விரு அணிகளும் மோதிய 23வது லீக் ஆட்டத்தில் குஜராத் 58 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
  •  ராஜஸ்தான் அணியின் கேப்டனும், முக்கிய பேட்ஸ்மேனுமான சஞ்சு சாம்சன் காயம் காரணமாக அணியில் இருந்து விலகி இருப்பது பெரும் பின்னடைவாக உள்ளது.
  •  சாய் சுதர்சன், சாய் கிஷோர், ஷாருக்கான், வாஷிங்டன் சுந்தர் என தமிழ்நாடு வீரர்கள் ஆடும் அணியில் இடம் பிடித்து அதிரடியாக விளையாடி குஜராத்துக்கு வெற்றி தேடி தருகின்றனர்.

The post 47வது லீக் போட்டியில் இன்று: எட்டாத உயரத்தில் குஜராத்; தோல்வி துயரத்தில் ராஜஸ்தான் appeared first on Dinakaran.

Tags : 47th league match ,Gujarat ,Rajasthan ,Rajasthan Royals ,Gujarat Titans ,IPL ,league ,Dinakaran ,
× RELATED இந்த ஆண்டில் ‘கூகுளில்’ அதிகம்...