×

வெளிமாநில மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது

தூத்துக்குடி, ஏப். 11: தூத்துக்குடிக்கு ரயிலில் வெளிமாநில மதுபாட்டில்களை கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி ரயில் நிலையத்தில் நேற்று மைசூரில் இருந்து வந்த விரைவு ரயிலில் இருப்புப்பாதை காவல் நிலைய போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் பையை சோதனையிட்டனர்.

இதில் அவர், வெளிமாநில மதுபாட்டில்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர், சேர்வைக்காரன்மடம் மேலத்தெருவைச் சேர்ந்த வெள்ளையா மகன் முத்துக்குமார் (28) என்பதும், பெங்களூருவில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 24 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

The post வெளிமாநில மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Thoothukudi, Ap ,Tuticorin ,Toothukudi railway station ,Mysore ,Dinakaran ,
× RELATED நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மாயம்