- சக்ரவகேஸ்வரர் கோயில் பல்லக் திருவிழா:
- வட்டாத்ஷியர்
- கும்பகோணம்
- சக்ரப்பள்ளி சக்ரவகேஸ்வரர் கோயில் சப்தன விழா
- சக்ரவகேஸ்வரர் சுவாமி கோயில்
- சக்ரப்பள்ளி கிராமம்
- பாபனாசம் தலுகா, தஞ்சாவூர் மாவட்டம்
- சக்ரவகேஸ்வரர் கோயில் பல்லக் திருவிழா
- தின மலர்
கும்பகோணம், ஏப்11: கும்பகோணம் அருகே சக்ராப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் சப்தஸ்தான திருவிழாவின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, சக்ராப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள சக்ரவாகேஸ்வரர் சுவாமி திருக்கோயில் பல்லக்கு திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வான பல்லக்கு புறப்பாடு வருகின்ற 13ம் தேதி அன்று அதிகாலை சக்கரவாகேஸ்வரர் கோயிலில் இருந்து துவங்கி 14ம் தேதி அன்று இரவு மீண்டும் திருக்கோயிலிலேயே எழுந்தருள உள்ளது. இது தொடர்பாக பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பழனிவேல் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயில் கண்காணிப்பாளர் ராஜா, கோயில் ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ், போலீஸ் டிஎஸ்பி முருகவேல், அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, கோயில் ஆய்வாளர் லட்சுமி, துணை வட்டாட்சியர் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் ரகுராமன் மற்றும் தீயணைப்புத்துறை, பேரூராட்சி ஊரக வளர்ச்சித்துறை, மின்வாரியத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அலுவலர்களும், ஏழூர் கிராம கமிட்டி குழுவினர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காவல்துறையினர் வருவாய்த்துறையினருடன் இணைந்து ஏழு கிராமங்களுக்கும் எத்தனை மணிக்கு பல்லக்கு செல்ல வேண்டுமென முடிவு செய்திடவும், கிராம தன்னார்வ தொண்டர்கள் குழு அமைத்திடவும், கிராமங்களில் முக்கிய பிரமுகர்களிடம் கலந்து ஆலோசனை செய்திடவும் அறிவுறுத்தப்பட்டது. அனைத்து கிராமங்களிலும் தெருவிளக்கு தடையின்றி ஒளிர செய்ய வேண்டும், திருவிழா நாட்களில் துப்புரவு பணிகளை அடிக்கடி மேற்கொள்ளவும், குடிநீர் வசதி செய்து தரவும், அடிக்கடி குளோரினிசேசன் செய்திடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் உதவி வசதி செய்து தரவும், நடமாடும் மருத்துவக்குழு அமைத்திட வேண்டும் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post சக்ரவாகேஸ்வரர் கோயில் பல்லக்கு திருவிழாவை முன்னிட்டு ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்: வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது appeared first on Dinakaran.
