×

வண்டலூர் மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

கீழ்வேளூர், ஏப். 11: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த வண்டலூர் சியாமளாதேவி சக்தி வாழ் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த மாதம் 30ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து தினம்தோறும் அபிஷேக ஆராதனை நடைப்பெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தீமிதி திருவிழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. முதலில் சக்தி கரகம் எடுத்து வந்தவர் தீக்குழியில் இறங்கினார். பின்னர் காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கிராமவாசிகள், விழா குழுவினர் செய்திருந்தனர்.

The post வண்டலூர் மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Vandalur Mariamman Temple Theemithi Festival ,Kilvelur ,Panguni Festival of Vandalur Siyamaladevi Sakthi Vazh ,Mariamman ,Temple ,Nagapattinam ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரும்படி சப்.கலெக்டரிடம் கோரிக்கை