×

பிரதோஷ சிறப்பு வழிபாடு

அரூர்: பிரதோஷத்தையொட்டி, அரூர் கடைவீதியில் உள்ள வாணீஸ்வரர் கோயிலில் நந்திக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை கொண்டு அர்ச்சனைகளும், சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் ஆலயத்திலும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும், அரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள வர்ணீஸ்வரர் ஆலயத்திலும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்ற வழிபட்டனர்.

The post பிரதோஷ சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Vaneeswarar temple ,Aroor Kadayaveeti ,Nandi ,Theerthagriswarar temple ,Theerthamalai… ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரும்படி சப்.கலெக்டரிடம் கோரிக்கை