×

சிறுமிக்கு பாலியல் டார்ச்சர் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல், ஏப். 26: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. திண்டுக்கல் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தாமஸ் பெர்னான்டோ (28). இவர் கடந்த 2024ம் ஆண்டு காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் உறவினர்கள் புகாரில் திண்டுக்கல் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து தாமஸ் பெர்னான்டோவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி வேல்முருகன் இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் தாமஸ் பெர்னான்டோக்கு ஆயுள் தண்டணை, ரூ.1.12 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

The post சிறுமிக்கு பாலியல் டார்ச்சர் வாலிபருக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Dindigul POCSO Special Court ,Thomas Fernando ,
× RELATED புழல் சிறைச்சாலையில் வாகனங்கள் ஏலம்