×

சிவகிரியில் கட்டிட தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சிவகிரி,ஏப்.26: கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து சிவகிரியில் கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எம் சாண்ட், ஜல்லி, கற்கள் மற்றும் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து சிவகிரி தாலுகா அலுவலகம் முன் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்டிட தொழிலாளர் சங்க தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் சரவணன், பொருளாளர் சித்தநாதன், துணைத் தலைவர் முனீஸ்வரன், துணைச் செயலாளர் முருகன், காளிமுத்து உள்பட கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதுநிலை வருவாய் ஆய்வாளர் மணிகண்டனிடம் அளித்தனர்.

The post சிவகிரியில் கட்டிட தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Building ,Workers Union ,Shivagiri Shivagiri ,Shivagiri ,Shivagiri Taluga ,Building Workers Union ,Dinakaran ,
× RELATED புழல் சிறைச்சாலையில் வாகனங்கள் ஏலம்