×

ஒருங்கிணைந்த குற்றப் பிரிவினரின் சட்ட விரோத நடவடிக்கைகளை பெரிதும் குறைத்துள்ளது: சென்னை பெருநகர காவல்

சென்னை: ஒருங்கிணைந்த குற்றப் பிரிவினரின் (Organized Crime Unit) சட்ட விரோத நடவடிக்கைகளை பெரிதும் குறைத்துள்ளது என சென்னை பெருநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், குற்றச் செயல்களில் ஈடுபடும் முக்கியக் குழுக்களை கண்காணித்து, அவர்களை எதிர்கொள்வதுடன், தனிப்பட்ட விரோதங்கள், பழிவாங்கும் நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்களை இலக்காகக் கொண்டு செயல்படும் மிரட்டல் குழுக்கள் போன்ற குற்றச் செயல்களை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டு, 23.07.2024 அன்று, சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப உத்தரவுப்படி நுண்ணறிவுப் பிரிவில் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த குற்றப் பிரிவு (OCU), இணை ஆணையாளர், துணை ஆணையாளர் நேரடி மேற்பார்வையில் தகுந்த புலன்கள் மூலமும், பருந்து போன்ற தொடர் கண்காணிப்பு நவீன வசதிகளுடன் கொண்ட திட்டங்கள் மூலம் பல்வேறு சாதனை புரிந்து, மக்களின் பாதுகாப்பை மேம்படுத்தியுள்ளது.

இப்பிரிவினரின் ஒருங்கிணைந்த முயற்சியால், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றம் புரிந்த / குற்றம் புரிய வாய்ப்புள்ள, புறநகரில் வசிக்கும் நபர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், மேற்படி குற்றம் சம்பந்தப்பட்ட 786 தகவல்கள் இதுவரையில் சேகரிக்கப்பட்டு, உள்ளூர் காவல் துறையினருக்கு அனுப்பப்பட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பிரிவினரால், கொடுங்குற்றத்தில் ஈடுபடவாய்ப்புள்ள 4,300 போக்கிரிகளும், 476 பெரிய குழுக்களும், 223 சிறிய குழுக்களும் கண்காணிக்கப் படுவதுடன், அவர்கள் சார்ந்த வழக்குகள் முறையாகக் கண்காணிக்கப்பட்டு, மூன்று 3 A வகை சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுக்கும், 8 B வகை சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுக்கும், 27 C வகை சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுக்கும், 01 KD வகை குற்றவாளிக்கும் என மொத்தம் 39 குற்றவாளிகளுக்கும் அவர்கள் சார்ந்த குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றும் தரப்பட்டுள்ளது.

மேலும், இப்பிரிவு உருவாக்கப்பட்டதன் விளைவாக, பெரும்பான்மையான குழுக்கள் முடக்கப்பட்டுள்ளதோடு, 32 A+ வகை குற்றவாளிகளும், 108 A வகை குற்றவாளிகளும், 325 B வகை குற்றவாளிகளும், 549 C வகை குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டதோடு, 417 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், கொடுங்குற்றத்தில் ஈடுபட்டு பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளாக இருந்துவரும், சி.டி.மணி, தக்ஷிணா மூர்த்தி, ஆடு சரவணன், அகரம் கதிர், பாம் சரவணன், காவாங்கரை விஜி. வீரராகவன், ரூபன், ராம்கி, வெள்ளை சஞ்சய், சூழ்ச்சி சுரேஷ், தொப்பை கணேஷ், அறிவழகன், தில்குமார் மதன், மோகன், ஜான்சன், வெள்ளை சுதா, கார்டன் சரத் மற்றும் மோசஸ் போன்ற 19 போக்கிரிகளும் அடங்குவர்.

மேலும், நீதிமன்றப் பிடியாணை பிறக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 35 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகள் அவர் தம் உறவினர், நண்பர்கள் தொடர்புடைய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு, கொடுங்குற்றச் செயல்களில் தொடர்பு ஏற்படாதவண்ணம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொடுங்குற்ற நிகழ்வுகள் மேற்படி ஒருங்கிணைந்த குற்றப் பிரிவின் நடவடிக்கைகளால் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

The post ஒருங்கிணைந்த குற்றப் பிரிவினரின் சட்ட விரோத நடவடிக்கைகளை பெரிதும் குறைத்துள்ளது: சென்னை பெருநகர காவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Metropolitan Police ,Chennai ,Organized Crime Unit ,Combined Crime Squad ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...