×

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

 

பெரம்பலூர்,ஏப்.25: புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் புதிய நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் (மாயவன் சங்கம்) பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல், பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த தேர்தல், தேர்தல் ஆணையாளரான அரியலூர் மாவட்ட தலைவர் கார்த்திக் முன்னிலையில் நடைபெற்றது.

மாவட்ட நிர்வாகிகள் தேர்தலுக்கான சிறப்பு பார்வையாளராக, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில தணிக்கையாளர் கணேஷ் ராஜா, முன்னாள் மாவட்டத் தலைவர் ராமர் ஆகியோர் கலந்துகொண்டார். மாவட்ட தேர்தலில் பட்டதாரி ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டு வாக்களித்தனர். இந்த மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தலில் பொறுப்பாளர்கள் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்படி பெரம்பலூர் மாவட்ட தலைவராக அன்புச்செல்வன், மாவட்டசெயலாளராக அருண் குமார், மாவட்டப் பொருளாளராக நந்தகுமார், மாவட்ட தலைமையிடச் செயலாளராக சிவானந்தம், மாவட்ட மகளிர் அணியின் செயலாளர்களாக விஜயா, சித்ரா, மாவட்ட துணை தலைவர்களாக செந்தில் குமார், சின்னையன், பழனியாண்டி, ராஜா,

மாவட்ட இணைச் செயலாளர்களாக தமிழ்ச்செல்வன், சக்திவேல் பொன்னையன், மாவட்ட சட்டச் செயலாளராக அன்புசெல்வன், மாவட்ட செய்தித் தொடர்பு செயலாளராக சரவணன் ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  இதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகளின் கூட்டத்தில், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறை வேற்ற வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

The post புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Graduate Teachers Association ,Perambalur ,Tamil Nadu Higher and Secondary School Graduate Teachers Association ,Tamil Nadu Higher and Secondary School Graduate Teachers Association… ,Dinakaran ,
× RELATED அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்