×

பெரம்பலூரில் டிரம்ப் உருவபொம்மை எரித்து மா.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், ஜன.6: பெரம்பலூரில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து அதிபர் ட்ரம்ப்பின் உருவ பொம்மையை எரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். வெனிசுலா நாட்டின் மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து பெரம்பலூர் புது பஸ்டாண்டில் பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்லதுரை, ராஜேந்திரன், கலையரசி, ரெங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம், சோசலிச நாடான வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி வெனிசுலா அதிபர் மதுராவையும், அவரது மனைவியும் கைது செய்துள்ளதை கண்டித்தும், வெனிசுலா அதிபரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் உருவ பொம்மையை எரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 2 பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Communist Party of India ,Marxist ,Trump ,Perambalur ,President Trump ,Venezuela ,President ,Nicolas Maduro ,
× RELATED அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்