×

வேளாண் கல்லூரி மாணவியர் பயிற்சி

நாமக்கல், ஏப்.25: நாமக்கல், பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவிகள், சின்னமணலியில் உள்ள ஆரைக்கல் வேளாண்மை உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவனத்தில் பயிற்சி பெற்று வந்தனர். இதன் நிர்வாக இயக்குனர் தமிழ்ச்செல்வன், புனிதா ஆகியோர் நிறுவனத்தின், தயாரிப்பு பொருட்கள் குறித்து மாணவியருக்கு விளக்கினர். ஆரைக்கல் வேளாண்மை உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவனம், பாரம்பரிய அரிசி வகைகள், சுத்தமான தேன், அவல், சிறுதானிய பொடி வகைகள் மற்றும் மதிப்புக்கூட்டு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். பிஜிபி வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு இயக்குனர் தமிழ்ச்செல்வன் பயிற்சி சான்றிதழை வழங்கினார்.

The post வேளாண் கல்லூரி மாணவியர் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : College ,Namakkal ,BGP Agricultural Science College ,Araikkal Agricultural Farmers Producers Institute ,Chinnamanali ,Managing ,Tamilselvan ,Puneetha ,Agricultural College ,Dinakaran ,
× RELATED வேன் கவிழ்ந்து விவசாயி பலி