×

மத்தூர் ஒன்றியத்தில் ரூ.21 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்

போச்சம்பள்ளி, ஏப்.25: மத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மூக்காகவுண்டனூர் பகுதியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், விவசாயிகள் பயன்படுத்தும் கதிரடிக்கும் களம் ரூ.8.90 லட்சம் மதிப்பீட்டிலும், அதே பகுதியில் மயானத்துக்கு சுற்றுச்சுவர் ரூ.12 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் குண.வசந்தரசு தலைமை தாங்கி பணிகளை துவக்கி வைத்தார். இதில் தலைமை செயற்குழு செந்தில், முன்னாள் கவுன்சிலர் சங்கர், முன்னாள் சேர்மன் விஜயலட்சுமி பெருமாள், மாவட்ட மருத்துவர் அணி துணை தலைவர் கமலநாதன், மூர்த்தி, விளையாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் கதிர்வேல், மோகன்குமார், முனுசாமி, கண்ணன், இளவரசன், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மத்தூர் ஒன்றியத்தில் ரூ.21 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் appeared first on Dinakaran.

Tags : Mathur ,Pochampally ,Mookagavandanur ,Mathur union ,Dinakaran ,
× RELATED ரூ.4.38 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்