சங்கரன்கோவில். ஏப்.25: சங்கரன்கோவில் அருகே பனவடலிசத்திரம் ஆட்டோ ஸ்டாண்டில் வைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பனவடலிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமை வகித்து பேசுகையில், ஆட்டோ ஓட்டுநர்கள் சீருடை அணிய வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது. செல்போன் பேசிக் கொண்டு ஓட்டக்கூடாது. அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றக்கூடாது. அதிக வேகத்துடன் செல்லக்கூடாது. பெண்கள் மற்றும் பெரியவர்களிடம் கனிவான முறையில் நடந்து கொள்ள வேண்டும். பஜாரில் சந்தேகத்திற்கு இடமான அந்நிய சந்தேக நபர்கள் காணப்பட்டால் காவல் துறைக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இக்கூட்டத்தில் பனவடலிசத்திரம் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் காவலர்கள் பங்கேற்றனர்.
The post பனவடலிசத்திரத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.
