×

வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முதல் நாடு இந்தியாவாக இருக்கும்: அமெரிக்க அமைச்சர் பேட்டி

நியூயார்க்: இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீத பரஸ்பர வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ளார். இந்த சூழலில் டிரம்ப் நிர்வாகத்துடன் ஒன்றிய அரசு வர்த்தக பேச்சு வார்த்தையை முன்னெடுத்துள்ளது. இந்த சூழல்நிலையில், அமெரிக்க அரசுடன் ஒன்றிய அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அமெரிக்க கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசன்ட் கூறுகையில்,‘‘உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் அதிக வரிகள் இல்லாததால், இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமான முடிவை எட்டுவதில் நெருங்கி உள்ளோம். இந்தியாவுடன் ஒப்பந்தத்தை எட்டுவது மிகவும் எளிதானது’’ என்றார்.

The post வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முதல் நாடு இந்தியாவாக இருக்கும்: அமெரிக்க அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : India ,US ,New York ,President Trump ,Union government ,Trump administration ,US government… ,Dinakaran ,
× RELATED பலுசிஸ்தானில் சீன ராணுவம் குவிப்பு: இந்தியா தலையிட பலுச் தலைவர் கோரிக்கை