கீவ்: ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 24 பேர் பலியானார்கள். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சமாதானப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளது. எனினும் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்களும் அதிகரித்து வருகின்றது.
உக்ரைனின் கெர்சன் பிராந்தியத்தில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கோர்லி கிராமத்தில் நேற்று புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. டிரோன்கள் மூலமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
