- ஆம்ஸ்டர்டாம் சர்ச
- புதிய ஆண்டு
- ஆம்ஸ்டர்டம்
- நெதர்லாந்து
- புதிய ஆண்டுகளுக்கு
- ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து
- புத்தாண்டு விழா
ஆம்ஸ்டர்டாம்: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் நெதர்லாந்தில் 150 ஆண்டு பழமையான ஆம்ஸ்டர்டாம் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் 19ம் நூற்றாண்டை சேர்ந்த தேவாலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன.
அப்போது திடீரென தேவாலயம் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பரவியதில் 50 மீட்டர் உயர தேவாலயம் முற்றிலும் உருக்குலைந்தது. இந்த தேவாலயம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் அப்பகுதியில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
முன்னதாக புத்தாண்டு கொண்டாட்டத்தில் வாணவேடிக்கையின் போது நெதர்லாந்தின் பல இடங்களில் தீ விபத்து சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 16 வயது சிறுவன் உட்பட 2 பேர் பலியாகி உள்ளனர். தீ விபத்தை தொடர்ந்து போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வன்முறை சம்பவங்களும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
