×

நீடாமங்கலத்தில் கோடை சாகுபடியில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்

நீடாமங்கலம், ஏப்.24: நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதியில் அறுவடைக்கு கோடை நெல் சாகுபடிக்கு தயாராகி வருகிறது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதியில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நிலத்தடி நீரை பயன்படுத்தி மின் மோட்டாரில் மூன்றாம்போகம் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நெல் சாகுபடி இரண்டு பட்டமாக பிரிக்கப்பட்டு முன்பட்டம், பின்பட்டம் என்ற சாகுபடி செய்து வருகின்றனர்.

முன்பட்டம் சாகுபடி செய்த விவசாயிகள் முன்கூட்டியே விதை விட்டு நடவு நட்ட பயிர்கள் தற்போது காளாச்சேரி, மேலப்பூர், எடமேழையூர் சாலை, ஆதனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கதிர்முதிர்ந்து அறுவடைக்கு தயாராகி வருகிறது. பின்பட்ட சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது களை எடுப்பு பணி, உரம் இடும் பணி, பூச்சிமருந்து தெளிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post நீடாமங்கலத்தில் கோடை சாகுபடியில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர் appeared first on Dinakaran.

Tags : Needamangala ,NEEDAMANGALAM ,KOTA ,Nidamangalam Agricultural Kota ,Thiruvarur district ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரும்படி சப்.கலெக்டரிடம் கோரிக்கை