×

கோயில் நிலம் மீட்பு

தேனி, ஏப். 24: பெரியகுளம் நகர், வடகரையில் மலைமேல் அறம் வளர்த்த தையல் நாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரம் பகுதியில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான 25 சென்ட் நிலத்தை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்திருந்தனர். இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜெயதேவி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் நேற்று போலீசார் உதவியுடன், ஆக்கிரமித்து இருந்த நபர்களிடமிருந்து கோவில் நிலத்தை மீட்டு கையகப்படுத்தினர்.

The post கோயில் நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Theni ,Thayyal Nayaki Amman temple ,Periyakulam Nagar, Vadakarai ,Vaidyanathapuram ,Periyakulam Vadakarai ,
× RELATED நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மாயம்