- 73 வது குடியரசு தினம்
- தமிழகம்
- வேலு நாச்சியார்
- மருது சகோதரர்கள்
- சென்னை மெரினா
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மருது
- மெரினா கடற்கரை
சென்னை: 73வது குடியரசு தினத்தையொட்டி சென்னையில் வரலாற்றை பறைசாற்றிய தமிழக அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு தொடங்கியது. மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றினார். தமிழக ஆளுநராக பதவியேற்ற ஆர்.என்.ரவி முதல் முறையாக மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே நாட்டுப்பண் இசைக்க தேசிய கொடியை ஏற்றினார். இதை தொடர்ந்து டெல்லி அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் ஊர்தி உள்பட 4 ஊர்திகள் சென்னையில் அணிவகுத்து செல்கின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட வீரமங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் சுந்தரலிங்கம், குயிலி ஆகியோர் சிலைகளுடன் அலங்கார ஊர்தி இடம்பெற்றுள்ளது. இதேபோல், விடுதலைக்காக பாடுபட்ட வ.உ.சி, பாரதியார், சுப்பிரமணிய சிவா, ராகவாச்சாரி அவருடன் விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களை காட்சிபடுத்தும் தத்ரூப சிலைகளுடன் சுதேசி கப்பலும் அலங்கார ஊர்தியில் இடம்பெறுகிறது. இதுபோக, தந்தை பெரியார், ராஜாஜி, காமராஜர், தீரன் சின்னமலை உள்ளிட்ட தலைவர்களின் தத்ரூப உருவங்கள் அடங்கிய தத்ரூப சிலைகள் கொண்ட ஊர்தியும் இடம்பெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு மொத்தமாக 3 அலங்கார ஊர்திகள் மட்டுமே அணிவகுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது….
The post 73வது குடியரசு தினம்: சென்னை மெரினாவில் வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், குயிலி உருவங்கள் அடங்கிய தமிழக அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு appeared first on Dinakaran.