சென்னை: பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “வணிகவரி, பத்திரப்பதிவு துறை மற்றும் போக்குவரத்து துறைக்கான கொள்கை விளக்க புத்தகம் நேற்று இரவு 9 மணிக்குத்தான் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. இரவு கொடுத்தால், எப்படி படித்துவிட்டு காலையில் விவாதத்தில் பேச முடியும். அதனால் ஒரு நாள் முன் புத்தகம் வழங்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதற்கு பதிலளித்த சபாநாயகர், “இதுபற்றி பேரவை நடப்பதற்கு முன் ஆலோசித்தேன். அப்போது, கொள்கை விளக்க புத்தகம் 2 நாளுக்கு முன் எம்எல்ஏக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி இருந்தேன். இனி இதுபோல் நடக்காது ” என்றார்.
The post எடப்பாடி பழனிசாமி கோரிக்கையை ஏற்ற சபாநாயகர் அப்பாவு appeared first on Dinakaran.
