×

ஒரு கண் தேசம், இன்னொரு கண் தமிழ்: குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

 

ராமேஸ்வரம்: தமிழ் மொழி மேன்மையானது என சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராமேஸ்வரத்தில் நடந்துவரும் காசி தமிழ்ச் சங்கம நிறைவு விழாவில் பேசிய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்; அப்துல் கலாமை தந்த புண்ணிய பூமியில் சிவமயமான காசி தமிழ்ச் சங்கமம் விழா. தமிழகத்தின் வீதியில் இருந்து தேசியத்தை பற்றி யோசித்து பாடியவர் பாரதியார். காசியையும் ராமேஸ்வரத்தையும் யாராலும் பிரிக்க முடியாத புனித நகரங்கள்; காசியும் தமிழும் சங்கமிக்கும் விழா இது. ஒரு கண் தேசமென்றால், இன்னொரு கண் தங்க தாய்மொழி தமிழ்.

தேசம் வாழ்க என்று சொன்னால் தமிழுக்கு எதிரானவர்களா நாம்? தமிழ் மொழி மேன்மையானது. காசியும் ராமேஸ்வரமும் யாராலும் பிரிக்க முடியாத புனித நகரங்கள்; நாட்டுக்கு இன்னல் ஏற்படும்போது நாம் ஒருங்கிணந்து போராட வேண்டும். உலகில் பாரதம் உச்சம் தொடும்போது, பாரதத்தில் தமிழகம் உச்ச நிலையை தொட வேண்டும். வளமான தமிழகம், வளமான இந்தியா; பாரதத்தை எந்த தீய சக்தியாலும் பிளவுபடுத்த முடியாது. ஆளுநர் ரவி அழகாக தமிழில் உரையாற்றினார். நானும் ஹிந்தியை கற்றுக்கொண்டு பேச வேண்டும் என நினைக்கிறேன் என்று கூறினார்.

Tags : Vice President ,C. B. Radakrishnan ,Rameswaram ,B. Radhakrishnan ,Kashi Tamil Sangama Closing Ceremony ,Rameshwari ,Republic ,Abdul Kalam ,
× RELATED 2026-27ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் குறித்து...