×

10 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே ஆவிச்சிபட்டி பாண்டியன் நகர் பகுதியில் சின்னழகு என்பவருக்கு சொந்தமான புளியந்தோப்பு உள்ளது. இந்த தோப்பில் நேற்று ராட்சத மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனை பார்த்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள், இது குறித்து நத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் தலைமையில் விரைந்த தீயணைப்பு வீரர்கள், புதரில் பதுங்கியிருந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் கரந்தமலைப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பாம்பு பத்திரமாக விடுவிக்கப்பட்டது.

Tags : Natham ,Chinnazhaku ,Pandian Nagar ,Aavichipatti ,Dindigul district ,
× RELATED காசோலை மோசடி வழக்கில் மதிமுக எம்.எல்.ஏ....